tamilnadu

img

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடிக்கு கொரோனா...

இஸ்லாமாபாத்
இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாறுமாறான வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 5000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக அங்கு பரவல் வேகம் சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 6 ஆயிரத்து 472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் இன்று நாளில் 88 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் பிரபல அதிரடி ஆல்ரவுண்டரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.     

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,"கடந்த வியாழன் முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ்" என பதிவிட்டுள்ளார். 

40 வயதாகும் அப்ரிடிக்கு நாடியா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும்  உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

;